ஆப்கானிஸ்தான் இராணுவம், கூட்டுப்படையுடன் இணைந்து விமானம் மூலம் வீசிய குண்டுகள் பொதுமக்கள் வசித்த பகுதியில் விழுந்ததினால் குழந்தை, பெண்கள் மற்றும் முதியோர் உள்ளடங்களாக 26 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் நடத்தும்போது உயிரிழந்த பொதுமக்கள் அனைவரும் உறக்கத்தில் இருந்ததாகவும் நட்பு படைகளை பாதுகாக்கவே இந்த வான்வழி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் குந்தூஸ் மாகாண செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அரசாங்கத்துக்கெதிராக செயற்பட்டு வரும் தலிபான்கள் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் மூன்று ஆப்கானிஸ்தான் சிறப்புப்படை வீரர்களை சுட்டுக் கொன்றதனையடுத்தே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.