குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
சந்தேக நபர்கள் மற்றும் குற்றவாளிகளுக்காக மட்டுமே தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குரல் கொடுத்து வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பெரும் எண்ணிக்கையிலான மனித உரிமை அமைப்புக்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சியாளர்களை பாதுகாப்பதற்கு பதிலாக குற்றவாளிகள் சந்தேக நபர்களை பாதுகாக்க முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கைதிகள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் நோக்கில் இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். கைதிகள் மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பிலேயே அனைவரும் கரிசனை கொண்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்கள் பாதுகாக்கப்படாத நிலைமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.