153
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நிதி அமைச்சில் இன்றைய தினம் நடத்தப்பட உள்ளது. 2017ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் செய்யப்பட்ட பரிந்துரைகள், வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆராயப்பட உள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்க உள்ளனர்.
Spread the love