துருக்கியில் காவல் நிலையம் ஒன்றுக்கு அருகே இன்று பயங்கரமான குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகவும் இந்த தாக்குதலில் காயமடைந்த பலர் அம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
துருக்கியில் ஆயுதமேந்திய குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி அரசுக்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக உள்ளதாக தெரிவித்து அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களான மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள்; டியார்பக்கிர் என்ற நகரில் கைது செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் நாட்டின் தென்கிழக்கு பகுதியான பக்லர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் விசாரணைக்காக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். குறித்த காவல் நிலையத்துக்கு அருகேயே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தாக தெரிவிக்கப்படுகின்றது.