காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசைக் கண்டித்து கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான பேரணி நாளை சனிக்கிழமை ஆரம்பமாகும் என தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பெரும்பகுதி விவசாயம் காவிரி நீரை நம்பியே உள்ள நிலையில், காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுப்பது வழமையாகியுள்ளது.
இதனால், டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் குறுவை சாகுபடி பொய்த்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக் கப்பட்டால்தான் இதற்கு தீர்வு கிடைக்கும் என்றிருந்த நிலையில், மத்திய அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனைக் கண்டிக்கும் வகையிலும், விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகள், கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங் கிணைப்புக் குழு பேரணி ஒன்றை நடத்த வுள்ளதாகவும் நாளை ஆரம்பமாகவுள்ள பேரணி சென்னை அடையாறில் உள்ள காந்தி மண்டபம் அருகே எதிர்வரும் 11-ம் தி-கதி நிறைவடையும் எனவும் இதையடுத்து, கிண்டி ஆளுநர் மாளிகையில் கோரிக்கை மனுவை அளிக்கவுள்ளதாகவும் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.