பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பாரிஸ் ஒப்பந்தத்துக்கு நேற்றையதினம் சர்வதேச சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள புவிவெப்பமயமாதலை கட்டுப் படுத்த உலக நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன. புவிவெப்ப மயமாதலை 2 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாகாமல் கட்டுப்படுத்து வதற்கான பருநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கடந்த ஆண்டு பாரிஸில் நடந்த கூட்டத் தின்போது எட்டப்பட்டது.
இந்த ஒப்பந்தத்ததத்துக்கு 192 நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தன. பாரிஸ் பருவநிலை ஒப்பந்தமானது நடைமுறைக்கு வரவேண்டு மெனில் காபன் வாயுவை கட்டுப்படுத்த ஒப்புக் கொண்டுள்ள உலக நாடுகளில், 55 நாடுகளாவது இதில் இணைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தத்தின்படி பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான செயல் திட்டங்களை வகுக்கும் நோக்கில் அடுத்த வாரம் மொராக்கோவில் நடைபெறவுள்ள கூட்டத்தில் ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றம் பற்றிய ஒரு விதிமுறை புத்தகத்தை எழுதுவது பற்றி கலந்துரையாட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது