163
வடமாகாணசபையால் கார்த்திகை மாதம் மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் மலர்க்கண்காட்சி இன்று சனிக்கிழமை (05.11.2016) ஆரம்பமாகியுள்ளது.
மரநடுகை மாதத்தை முன்னிட்டு பொதுமக்களும் சமூக அமைப்புகளும் மரநடுகையில் ஆர்வம் காட்டிவருகின்றனர். இவர்கள் தங்களுக்குத் தேவையான தரமான மரக்கன்றுகளைப் பெறும் நோக்கிலும் உள்ளூர் தாவர உற்பத்தியாளர்களுக்கான சந்தை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் நோக்குடனுமே இம்;மலர்க்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த தாவர உற்பத்திப் பண்ணையாளர்கள் 14 காட்சிக்கூடங்களை அமைத்துள்ளனர்.
இம்மலர்க்கண்காட்சியின் தொடக்கவிழாவில் பிரதம விருந்தினராக வடக்கு கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கலந்து கொண்டிருந்தார். இவரோடு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர்கள் க.சிவாஜிலிங்கம், க.தர்மலிங்கம், சி.அகிலதாஸ், அனந்தி சசிதரன்,விவசாய அமைச்சின்; செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் ஆகியோரும் திணைக்களத் தலைவர்களும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
மலர்க்கண்காட்சி எதிர்வரும் 11ஆம் திகதிவரை தினமும் காலை 9 மணியில் இருந்து இரவு 8 மணி வரையும் நடைபெறும் எனவும், கண்காட்சியைப் பார்வையிட வரும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love