குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பெயர் மாற்றம் செய்யப்பட்ட அரசியல் கட்சியொன்றின் தவிசாளராக ஜீ.எல்.பீரிஸை அண்மையில் தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்ததனைத் தொடர்ந்து பீரிஸின் கட்சி உறுப்புரிமையை கட்சி நிர்வாகம் நீக்கியுள்ளது.
மற்றுமொரு அரசியல்கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்ட காரணத்தினால் பீரிஸ் கட்சியிலிருந்து தானாகவே நீங்கிக்கொண்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வேறும் ஒர் கட்சியின் அங்கத்துவம் வகிக்கும் நபர் ஒருவர் சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
1 comment
பெயர் மாற்றம் செய்யப்பட்ட அரசியல் கட்சியொன்றின் தவிசாளராக ஜீ.எல்.பீரிஸை அண்மையில் தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்ததனைத் தொடர்ந்து அவரது உறுப்புரிமையை SLFP நீக்கியுள்ளது. மகிந்த ஆட்சியில், GCE o/l யே தாண்டாத சிலர் இவரை அடிமை கொண்ட அவலத்தை மறக்க முடியவில்லை? பரிதாபத்துக்குரிய ஒரு கல்விமானாகத்தான் இவரைப் பார்க்க முடிகின்றது? ராஜபக்ஷர்களால் பல முறை அவமதிப்புக்குள்ளான இவர், ஆட்சி மாற்றத்தின் பின் சற்று மௌனமாக இருந்தார்? புதிய கட்சி ஒன்றைத் தொடங்கியதன் மூலம், மேன்மேலும் அவமதிப்புக்குள்ளாகப் போகின்றார்! ஒன்று மட்டும் உண்மை! கட்சித் தவிசாளர் என்ற வகையில், ஊடகங்களில் உப்புச் சப்பில்லாமல் அடிக்கடி புலம்பப் போகின்றார்! அதைத் தங்க முடியாமல், வாசகர்களின் கண்ணும் காதும் வலிக்கப்போகின்றன!
புள்ளையா, குட்டியா? இன்னும் என்ன பதவி ஆசை வேண்டிக் கிடக்கின்றது? அரசியலில் இருந்து கௌரவமாக ஒதுங்கலாமே? அரசியலரங்கில் இருந்து சிலரை வெளியேற்ற, இப்படியும் ஒரு தந்திரம் இருக்கின்றது போலும்? இருந்தாலும், வெற்றுக் கோஷமிடும் இவரை வெளியேற்றுவதில், யாருக்கு என்ன லாபம்?