Home இலங்கைசீனத் தூதுவரின் கருத்து குறித்து வெளிவிவகார அமைச்சர் கவனம்

சீனத் தூதுவரின் கருத்து குறித்து வெளிவிவகார அமைச்சர் கவனம்

by admin


குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு

சீனத் தூதுவர் யீ ஸியான்லிங் கருத்து குறித்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஸியான்லிங், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பில் கடுமையான விமர்சனத்தை வெளியிட்டிருந்தார்.

இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் சீனத் தூதுவர் விமர்சனங்களை வெளியிட்டிருந்தார். இந்த விடயம் குறித்து உன்னிப்பாக ஆராயப்பட்டு வருவதாகவும் இந்த விடயங்களை ஆராய்ந்ததன் பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More