குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
புதிய அரசியல் சாசனத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக் கூடிய சாத்தியங்கள் குறைவு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தும் வகையில் அரசியல் சாசனம் அமையும் என குறிப்பிட்டுள்ள அவர் வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படுவதனை சிங்கள முஸ்லிம் மக்கள் விரும்ப மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் சிங்கள முஸ்லிம் மக்கள் நிரந்தரமாக சிறுபான்மையினராக மாற நேரிடும் என்ற அச்சத்தினால் இதனை விரும்பவில்லை எனவும் வடக்கு கிழக்கு மீள இணைக்கப்படுவதற்கு பதிலீடாக இரண்டாம்; பாராளுமன்ற முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.