குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
அமெரிக்காவின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என துருக்கி ஜனாதிபதி Recep Tayyip தெரிவித்துள்ளார். ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிப்பதற்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டுப்படையினர் தீவிரவாத அமைப்பின் உதவியை நாடியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தீவிரவாத அமைப்பு ஒன்றின் உதவியுடன் தீவிரவாத அமைப்பு ஒன்றை அழிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குர்திஸ் ஜனநாயக படையினரின் உதவியுடன் அமெரிக்கப்படையினர் சிரியாவில் தாக்குதல் நடத்தி வருகின்றது. குர்திஸ் தீவிரவாத அமைப்பு, துருக்கியில் மூன்று தசாப்தங்களாக குழப்பங்ளை விளைவித்து வந்த பீ.கே.கே. அமைப்பின் சக குழு என்பது குறிப்பிடத்தக்கது.