Home இலங்கைவெளிவிவகார அமைச்சின் செயலாளர் சீனத் தூதுவருடன் தொலைபேசியில் உரையாடினார்

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சீனத் தூதுவருடன் தொலைபேசியில் உரையாடினார்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

வெளிவிவகார அமைச்சின் செயலாளர், சீனத் தூதுவருடன் உரையாடியுள்ளார். அண்மையில் இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நிதி அமைச்சரின் நடவடிக்கைகள் குறித்து சீனத் தூதுவர் யீ ஸியான்லிங் ஊடகங்களில் விமர்சனம் செய்திருந்தார். இந்த விடயம் குறித்து சீனத் தூதுவருடன், இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அசேல வீரக்கோன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அது குறித்து உரையாடுவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இருக்கின்றது எனவும் பிரச்சினைகள் தொடர்பில் ஊடகங்களில் கருத்துப் பரிமாறிக்கொள்ள வேண்டிய அவசியம் சீனத்தூதுவருக்கு கிடையாது எனவும் அசேல வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More