180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
வாகனங்களுக்காக நாங்கள் மத்திய அரசாங்கத்திடம் மண்டியிட மாட்டோம் என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்து உள்ளார்.வடமாகாண சபையின் 65 ஆவது அமர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போது எதிர்கட்சி உறுப்பினர் செனவிரத்தின மாகாண சபை உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வாகன வரி அனுமதிப் பத்திரம் வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என கோரினார்.
அதனை அடுத்து கருத்து தெரிவித்த ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு இரண்டரை வருடங்களுக்கு பின்னர் தான் உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வரி அனுமதிப்பத்திரம் வழங்குவோம் என தெரிவிக்கப்பட்டது. அந்நிலையில் தற்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வரி அனுமதி பத்திரம் வழங்கப்பட்டு விட்டது. எமக்கு மூன்று வருடங்கள் ஆகியும் வழங்கப்படவில்லை.
எங்களுக்கு வாகனம் இருந்தால் தான் சேவை செய்வோம் என்று இல்லை நாம் பஸ்ல சென்றும் நடந்து சென்றும் சேவை செய்வோம். ஆனால் வைத்தியர்கள் தமக்கு தீர்வையற்ற வரி அனுமதிப் பத்திரம் வழங்க வேண்டும் என போராடிய போது அதனை கொடுத்தார்கள் எமக்கு தரவில்லை.
ஒரு வேளை எமக்கு தந்தால் ஏனைய மாகாண சபை உறுப்பினர்களுக்கும் கொடுக்க வேண்டிய தேவை ஏற்படும். அதனால் ஏனைய மாகாண சபையில் உள்ள மஹிந்த ஆதரவாளர்களுக்கும் கொடுக்க வேண்டும் எனும் எண்ணத்தில் எமக்கு தராமல் இருக்கிறார்களோ தெரியாது. அதற்காக நாம் அரசாங்கத்திடம் தீர்வையற்ற வரி அனுமதி பத்திரம் தாருங்கள் என மண்டிய மாட்டோம் என தெரிவித்தார்.
Spread the love