குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமில்லை என மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். சர்வதேச யுத்தக் குற்றச் செயல் விசாரணை தொடர்பிலான பிரச்சினை தற்போது கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹரகமவில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நீதவான்களின் பிரசன்னம் அவசியமில்லை என சர்வதேச சமூகம் உணர்ந்துகொண்டுள்ளதாகவும் யுத்தக் குற்றச் செயல்கள் குறித்த சர்வதேச நீதி விசாரணை என்ற அத்தியாயத்தை சர்வதேச சமூகம் மூடியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறான சூழ்நிலையிலும் சர்வதேச நீதவான்களின் பங்களிப்புடன் விசாரணை நடத்தப்படாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.