அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ராம்ப் வெற்றியீட்டியுள்ளார். எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலரி கிளின்ரனை வீழ்த்தி ட்ரம்ப் வெற்றியீட்டியுள்ளார்.
அமெரிக்காவின் 45ம் ஜனாதிபதியாக ட்ராம்ப் சற்று நேரத்திற்கு முன்னர் தேர்தலின் அடிப்படையில் தெரிவாகியுள்ளார். ஜனநாயக் கட்சியின் வேட்பாளர் ஹிலரி கிளின்ரன் 218 தேர்தல் கல்லூரிகளில் வெற்றியீட்டியதுடன், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ராம்ப் 278 தேர்தல் கல்லூரிகளில் வெற்றியீட்டியுள்ளார். தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது ஹிலரி கிளின்ரன் வெற்றியீட்டுவார் என பெரும்பாலும் ஊகங்கள் வெளியிடப்பட்டிருந்தன. புளோரிடா, ஒஹியோ, கலிபோர்னியா ஆகிய மாநிலங்களில் எதிர்வு கூறப்பட்டதற்கு தலைகீழாக ட்ராம்ப் வெற்றியீட்டியிருந்தார்.
எனது வெற்றிக்கு ஹிலரி வாழ்த்து தெரிவித்துள்ளார் என ட்ராம்ப் தெரிவித்துள்ளார். ஹிலரி கிளின்ரன் நீண்ட போராட்டம் நடத்தியதாகவும் அவரது சேவை நாட்டுக்கு தேவை எனவும் ட்ராம்ப் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து ஐக்கிய அமெரிக்காவை வெற்றிப்ப பாதையில் முன்னெடுக்க முயற்சிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார். ஒட்டுமொத்த அமெரிக்கர்களுக்கும் தாம் ஜனாதிபதி என அவர் குறிப்பிட்டுள்ளார். பின்சல்வேனியா, லோவா ஆகிய ஜனநாயகக்கட்சியின் முக்கிய மாநிலங்களில் ஹிலரி எதிர்பாராத தோல்வியை சந்தித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் உலகப் பொருளாதாரத்தில் சடுதியான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பல முக்கிய பங்குச் சந்தைகளில் பாரியளவில் சரிவு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இணைப்பு 2 – அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ராம்ப் முன்னிலையில்
Nov 9, 2016 @ 07:06
இணைப்பு 2 – பிந்திக் கிடைத்த தகவல்களின் படி டொனால்ட் ட்ராம்ப் 244 தொகுதிகளிலும், ஜனநாயகக் கட்சியின் ஹிலரி கிளின்ரன் 215 தொகுதிகளிலும் வெற்றியீட்டியுள்ளனர்.
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இதுவரையில் வெளியான முடிவுகளின் அடிப்படையில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ராம்ப் முன்னிலை வகிக்கின்றார். அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களில் 31 மாநிலங்களின் முடிவுகள் தற்போதைக்கு வெளியாகியுள்ளன. இதுவரையிலான வாக்குகள் முடிவில் டொனால்ட் ட்ராம்ப் 168 தொகுதிகளிலும், ஜனநாயகக் கட்சியின் ஹிலரி கிளின்ரன் 131 தொகுதிகளிலும் வெற்றியீட்டியுள்ளனர்.
சில முக்கியமான தொகுதிகளில் ட்ராம்ப் வெற்றியீட்டியுள்ளார். எவ்வாறெனினும், தற்போதைய முடிவுகளின் அடிப்படையில் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார் என்பதனை உறுதியாக ஊகிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது. எவ்வாறெனினும் முன்னதாக எதிர்வு கூறப்பட்டதனை விடவும் ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கும் குடியரசுக் கட்சியின் வேட்பாளருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.