பிரித்தானிய தொழிலதிபர்கள் கர்நாடகாவில் அதிகளவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் சித்த ராமையா பிரித்தானிய பிரதமர் தெரசா மே-விடம் கோரிக்கை விடுத்துள்ளார். மூன்று நாட்கள் சுற்றுப்பயண மாக இந்தியா சென்றுள்ள பிரித்தானிய பிரதமர் நேற்றையதினம்; பெங்களூரு சென்றிருந்த நிலையில் அவரை சந்தித்த போதே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியாவுக்கும் கர்நாடக மாநிலத்துக்கும் இடையே நீண்ட காலமாக நட்புறவு உள்ளது எனவும் இந்தச் சந்திப்பின் மூலம் பெங்களூரு மற்றும் பிரித்தானியா ஆகிய இரு தரப்பு தொழிலதிபர்களும் பலன் அடைவார்கள் என நம்புகிறேன என கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையா தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பம், கட்டு மானம் உள்ளிட்ட பல்வேறு துறை களில் பிரித்தானியாவைப் போலவே பெங்களூருவும் வேகமாக வளர்ந்து வருகிறது எனத் தெரிவித்த அவர் பிரித்தானியாவின் முதலீடுகளை வரவேற்கும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்க கர்நாடக அரசு தயாராக இருக்கிறது எனவும் அதே போல இந்தியாவில் இருந்து பிரித்தானியா செல்லும் ஊழியர்களை வரவேற்கும் வகையில் புதிய விசா கொள்கையை வரையறுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.