இந்தியாவின் கேரளமாநிலத்தில் பறவை காய்ச்சால் ஏற்பட்டிருப்பதாகவும் இதனால் தமிழகத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தி இந்து தெரிவித்துள்ளது. கேரள மாநில எல்லையையொட்டி அமைந்துள்ள தமிழ்நாடு பகுதிகளில் தமிழக கால்நடை பராமரிப்புத் துறையினர் முகாம்களை அமைத்து கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு பறவைக் காய்ச்சல் தடுப்பு மருந்து அடிக்கப்படுகின்றது.
இதேவேளை கேரளாவில் நோய் பாதிப்பு இல்லை என மத்திய அரசு அறிவிக்கும் வரை தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடரும்என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வலசைப் பறவைகள் வந்து செல்லும் பறவைகள் சரணாலயங் களிலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடு கள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மருந்து தெளிப்புக்கு, எளிதில் பயன்படுத்தக்கூடிய சிறிய அளவி லான கருவியை தமிழக கால்நடை பராமரிப்புத் துறை சோதனை முறையில் ஒருசில இடங்களில் பயன்படுத்துவதாகவும், விரைவில் அந்த கருவி அனைத்து மாவட்டங் களிலும் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.