Home இலங்கை டொனால்ட் ட்ராம்பிற்கு இலங்கை ஜனாதிபதி – பிரதமர் வாழ்த்து

டொனால்ட் ட்ராம்பிற்கு இலங்கை ஜனாதிபதி – பிரதமர் வாழ்த்து

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ராம்பிற்கு, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஈட்டிய வரலாற்று வெற்றிக்க வாழ்த்து தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி டுவிட்டரில் இந்த வாழ்த்துச்செய்தியை பதிவு செய்துள்ளார்.

டொனால்ட் ட்ராம்ப்பின் தேர்தல் வெற்றிக்கு பிரதமர் வாழ்த்து
அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ராம்ப்பின் தேர்தல் வெற்றிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகைக்கான ட்ராம்ப்பின் பயணம் மகத்தானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ட்ராம்ப் மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்து காத்திருப்பதாக பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் 45ம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ராம்பிற்கு ஜனாதிபதியும் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More