200
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமென வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கும் கோட்பாடு குறித்து எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை எனவும் பேச்சுவார்த்தை நடத்தப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற பேச்சுக்கு இடமில்லை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தந்தை செல்வா மற்றும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோர் வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கப்பட வேண்டுமென்றே நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love