167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
படைவீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்காக வருந்துவதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அண்மையில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் படைவீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்காகவே வருத்தம் வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கான முழுப் பொறுப்பினையும் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் இயங்கி வந்த அரசியல் சக்திகள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் சில தரப்பினரின் அரசியல் தேவைகளுக்காக படைவீரர்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love
1 comment
பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் திரு. ருவான் விஜேவர்தன தன்னை இங்கிலாந்துப் பல்கலைக்கழக் கலைப்பட்டதாரியென்று கூறிக்கொண்டாலும், அவரது நடவடிக்கைகள் சிறுபிள்ளைத்தனமானவை ஆகவும், முன்னுக்குப் பின் முரணானவை ஆகவுமே இருக்கின்றன!
படைவீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் ஆட்சியாளர்களே! சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியவர்கள் தாமேயென்பதை மறந்து, சம்பவத்திற்கான முழுப் பொறுப்பினையும் போராட்டத்தின் பின்னணியில் இயங்கி வந்த அரசியல் சக்திகள் மீது சுமத்தித் தப்பிக்க முயலுவதென்பது, எவ்வளவு அபத்தமானது? பொறுப்புவாய்ந்த பாதுகாப்பு ராஜாங்க அமைச்சுப் பொறுப்பை வகிக்கும் தகுதி, இவருக்கு இல்லையென்பதைச் சொல்லவும் வேண்டுமா?
வடக்கில் காணப்படும், ‘ஆவா’, என்ற வாள்வெட்டுக் குழு குறித்துக் கருத்துக் கூறும் இவர், அக் குழுவில் இராணுவத்தினரோ அன்றி விடுதலைப் புலிகளோ இல்லையென்று கூறுகின்றார்! புலிகள் குறித்த உண்மையைக் கக்கியமைக்காக இவரைப் பாராட்டலாமெனினும், அக் குழுவில் அங்கம் வகிப்பவர்கள் வேலை- வெட்டியற்ற சில தமிழ் இளைஞர்களே என்று கூறுவது, நகைப்புக்கிடமானது! ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இராணுவத்தினரும், கடல் மற்றும் வான்படையினரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள வடக்கு நகரங்கள் தோறும், போலீஸ் நிலையங்களும் இயங்குகின்றன? அது உண்மையெனில், தம்மையும், தமது உந்துருளியையும் உருமறைப்புச் செய்து, பட்டப் பகலில் வீதி உலா வரும் வாள் வெட்டுக் குழுவினரைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினர் தரம் குறைந்தவர்களா?
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரியான திரு. புஷ்பகுமார, ஆவா குழுவின் பின்னணியில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களே உள்ளனரென கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்! பிரதிப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான திரு. ருவன் விஜேவர்தன, தனது அதிகாரியின் அறிக்கை குறித்து என்ன சொல்லப் போகின்றார்? ஆளும் அரசின் அமைச்சரான திரு. ராஜித சேனாரத்ன, ஆவா வாள் வெட்டுக் குழுவில்
இராணுவத்தினரே அங்கம் வகிப்பதாக மீண்டும், மீண்டும் சொல்லி வருகின்றார்! பொறுப்புவாய்ந்த மூத்த அமைச்சரொருவரின் அறிக்கையைத் துச்சமாகக் கருத முடியுமா?
‘சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது’, என்பது பழமொழி! சிறுபிள்ளைத்தனமாக அறிக்கைவிடும் திரு. ருவான் விஜேவர்தன, சாத்தியமற்ற அறிக்கைகளை விட்டுத் தன்னைத் தரம் தாழ்த்திக் கொள்ளாது, ஒதுங்கியிருப்பதே மேல்! சிந்திப்பாரா?