குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
அபிவிருத்தியை இலக்கு வைத்து வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நீண்ட கால திட்டமொன்றினை அடிப்படையாகக் கொண்டே வரவு செலவுத் திட்டம் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் 20ம் நிதி அமைச்சரான ரவி கருணாநாயக்க இன்றைய தினம் வரலாற்றின் 70ம் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளார்.
அனைத்து மக்களுக்கும் வரப்பிரசாதங்களை வழங்கும் வகையில் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் புத்திஜீவிகள், பொருளியல் நிபுணர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள் உள்ளீடுகள் போன்றவற்றை உள்ளடக்கி வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சுமார் 2500 வரையிலான பரிந்துரைகள் பரிசீலனை செய்யப்பட்தாகத் தெரிவித்துள்ளார்.