குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
மாவட்ட நீதவான், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை சிறையில் சென்று பார்வையிட்டுள்ளார். கடந்த 10ம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த துமிந்தவை நீதவான் சென்று பார்வையிட்டுள்ளார். சிறிது நேரத்தை சிறைச்சாலை வைத்தியசாலையில் கழித்த நீதவான் பின்னர் அங்கிருந்து சென்றதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் துமிந்த உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. துமிந்த சில்வா கொலைக் குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தினத்திலும் குறித்த நீதவான் சிறைச்சாலைக்கு சென்றிருந்தார் எனவும் இது பற்றிய பதிவுகள் சிறைச்சாலை ஆவணங்களில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.