181
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கப்படுவதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மதவாத பிரச்சாரங்களின் ஊடாக சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த சில தரப்பினர் முனைப்பு காட்டி வருவதாகவும் முகநூல் ஊடாக இவ்வாறான பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
மன்னாரில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ள அவர் சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்கள் ஒன்றிணைந்து சிறந்த முறையில் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
Spread the love