Home இலங்கைஇடம்பெயர் மக்களுக்கு பொருத்து வீடுகள் வழங்கப்படுவதனை ஏற்க முடியாது – TNA

இடம்பெயர் மக்களுக்கு பொருத்து வீடுகள் வழங்கப்படுவதனை ஏற்க முடியாது – TNA

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

இடம்பெயர் மக்களுக்கு பொருத்து வீடுகள் வழங்கப்படுவுதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பொருத்து வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்க புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

சீமெந்து கற்களிலான வீடுகள் அமைக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் 65000 வீட்டுத் திட்டமானது கூடுதலான செலவில் மேற்கொள்ளப்படுவதாகவும் இதனை விடவும் குறைந்த செலவில் வீடுகளை நிர்மானிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More