184
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பிரபல ஹிந்தி நாளிதழ் ஒன்றில் மூத்த பத்திரிகையாளராக பணியாற்றிவரும் தர்மேந்திரா சிங் என்பவர் இன்று காலை வழமை போல் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இனந்தெரியாத நபர்கள் அவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
கடுமையான காயங்களுக்குள்ளாகிய நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
Spread the love