166
ஜப்பானில் கிழக்கு பகுதியில் உள்ள ஹொன்சு தீவில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக வீடுகள் ஆடியதன் காரணமாக மக்கள வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஹொன்சு தீவு பகுதியில் பூமிக்கு அடியில் 44 கி.மீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் உருவாகியுள்ளதாகவும் இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை.
Spread the love