குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
உண்மையை சமூகத்திற்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு ஜே.வி.பி கட்சிக்கு உண்டு என கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு விஹார மஹாதேவி பூங்காவில் நேற்று நடைபெற்ற இல் மஹா விரு நிகழ்வுகளில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எல்லா நேரங்களிலும் எதிரிகளின் தாக்குதலுக்கு இலக்காகிய போதிலும் மரித்துப் போகா அரசியல் சக்தியொன்றை தலைவர் ரோஹன விஜேவீர நிலைப்படுத்திச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டையும் மக்களையும் அதள பாதாளத்திற்கு இட்டுச் செல்வதாகவும் மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கம் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கி வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.