இலக்கியம் இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் சிறப்பாக நடைபெற்ற அரசியல் கைதியின் விடியலைத் தேடும் இரவுகள் நூல் வெளியீடு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி

img_8889
இன்று  14-11-2016  திங்கள்  கிளிநொச்சியில்  சிறப்பாக  நடைபெற்ற அரசியல் கைதி  விவேகானதனூர் சதீசின் விடியலைத் தேடும் இரவுகள்  நூல் வெளியீடு  பிற்பகல்  மூன்றுமணியளவில்  கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்  விருந்தினர்களாக  யாழ் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி  சத்தியமூர்த்தி ,பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் ,வடமாகாண போக்குவரத்து மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் ,வடமாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை ,அரியரத்தினம் ,சயந்தன் ,சுகிர்தன் அஸ்மின் ,கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்கத் தலைவர் ,மன்னார் மாவட்ட பொதுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் எஸ் .சிவகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
வள்ளுவர் புரம்  புரட்சி தலைமையில் அகவணக்கம் மற்றும் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இன்  நிகழ்வில்  விவேகானதனூர் சதீசின் விடியலைத் தேடும் இரவுகள் முதற் பிரதியினை பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் வழங்க வடமாகாண போக்குவரத்து மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் பெற்றுக்கொண்டார்  மற்றும் சிறப்புப் பிரதியினை வடமாகாண போக்குவரத்து மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன்  வழங்க பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் பெற்றுக்கொண்டார்.
img_8901
 சிறப்புரைகளின்  வரிசையில் யாழ் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி  சத்தியமூர்த்தி, வடமாகாண போக்குவரத்து மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன்,  மன்னார் மாவட்ட பொதுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் எஸ் .சிவகரன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்  நூலின் விமர்சன உரையினை  கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய ஆசிரியர் சத்தியானந்தம்  நிகழ்த்தினார்
மன்னார் மாவட்ட பொதுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் எஸ் .சிவகரன் தனது உரையில் மிகப்பெரிய நீதியரசரை  வடக்குமாகாண சபையிலே கொண்டுவந்து வைக்கப்பட்டது .அங்கு இருப்பவர்கள் எல்லாம் மிகுந்த கல்வியலாளர்கள் , நடந்தது என்ன  ,  ஒன்றும் செய்யவில்லை  வடக்கு மாகாண சபையில் ஆளுங்கட்சிக்குள்  எதிர்க்கட்சி என  வடக்கு மாகாண சபை பற்றி விமர்சனம்  செய்த போது வடமாகாண சபை உறுப்பினர்     ப.அரியரட்னம்  உரையினை நிறுத்துமாறு கோரி குழப்ப  நிலையில்  மேடையினை விட்டு வெளியேற  முயன்ற போது ஏற்பாட்டளர்களினால்  சமரசம் செய்யப்பட்டு நிகழ்வு  மீண்டும்  நடத்திச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இன் நிகழ்வில் யாழ் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி  சத்தியமூர்த்தி ,பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் ,வடமாகாண போக்குவரத்து மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் ,வடமாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை ,அரியரத்தினம் ,சயந்தன் ,சுகிர்தன் அஸ்மின் ,கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்கத் தலைவர் ,மன்னார் மாவட்ட பொதுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் எஸ் .சிவகரன் கல்வியலாளர்கள் , அரசியல் கைதி  விவேகானதனூர் சதீசின், கவிஞர்கள் ,மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் .
img_8903 img_8908 img_8913
img_8919 img_8933 img_8937 img_8942 img_8953

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link