குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
காவல்துறையினரின் சீருடையில் கமரா பொருத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது. அனைத்து காவல்துறை உத்தியோகத்தர்களினதும் சீருடைகளில் கமரா பொருத்தி ஒலி மற்றும் ஒளிக்காட்சிகளை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 13 மற்றும் 14ம் திகதிகளில் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் செயலமர்வில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்தி;ட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் நடத்தப்பட்டிருந்த இந்த செயலமர்வின் போது காவல்துறையினர் மேற்கொள்ளும் ஊழல் மோசடிகள் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் கமரா பொருத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த யோசனை குறித்து பரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.