Home உலகம்பல்கேரிய பிரதமர் ராஜினாமா

பல்கேரிய பிரதமர் ராஜினாமா

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

பல்கேரியாவின் பிரதமர் Boyko Borisov   தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தாம் பரிந்துரை செய்த ஜனாதிபதி வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டதனைத் தொடர்ந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பல்கேரிய ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் விமானப்படைத் தளபதி Rumen Radev வெற்றியீட்டியுள்ளார். பல்கேரியா சோவியத் ஒன்றியத்தின் ஓர் நாடாக முன்னதாக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் பதவியை ராஜினாமா செய்த காரணத்தினால் பல்கேரியாவில் காபந்து அரசாங்கமொன்று நிறுவப்படும் எனவும் விரைவில் தேர்தல் நடத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் காரணமாக மக்கள் தற்போதைய அரசாங்கம் மீது அதிருப்தியுடன் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More