154
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஹாவா குழுவைச் சேர்ந்த 62 பேரில் 38 பேர் கைது செய்பய்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குழுவினர் தமது முதலாவது வாளை பிரேஸிலிருந்து தருவித்துள்ளனர் எனவும், இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் அது இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவினைச் சேர்ந்த எட்டு பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love