Home இலங்கைஜீ.எல் பீரிஸின் கட்சியுடன் இணைந்து கொள்வோம் – திஸ்ஸ விதாரண

ஜீ.எல் பீரிஸின் கட்சியுடன் இணைந்து கொள்வோம் – திஸ்ஸ விதாரண

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியுடன் இணைந்து கொள்வோம் என முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். இடதுசாரி கட்சிகளினால் கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலளார் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தம்மைப் போலவே வாசுதேவ நாணயக்கார மற்றும் டியூ. குணசேகர போன்ற தலைவர்களும் புதிய கட்சியில் இணைந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ள அவர் இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம், கடன் செலவுத்திட்டம் மட்டுமேயாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இவ்வாறு வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More