குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
சித்திரவதைகள் விவகாரத்தில் எவ்வித நெகிழ்வு போக்கும் பின்பற்றப்படாது என சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார். சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் அமைப்புக் கூட்டத் தொடரில் பங்கேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை பாதுகாப்பு அதனை மேம்படுத்துதல் தொடர்பில் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தடுத்து வைக்கப்படும் போது இடம்பெறும் சித்திரவதைச் சம்பவங்கள் தொடர்பில் வெளிப்படையானதும் சுயாதீனமானதுமான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைவான வகையில் மனித உரிமைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள சட்ட மா அதிபர்; பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் இதில் சித்திரவதைகளுக்கு எதிரான சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.