Home இலங்கையாழ்.மாநகரசபை ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்

யாழ்.மாநகரசபை ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்

யாழ்.மாநகர சபையின் சுகாதார சபை சுகாதார தொழிலாளர்கள் மீண்டும் இன்று காலை தொடக்கம் தமது பணிக்கு திரும்பியுள்ளார்கள்.  இந்நிலையில் யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி வட பிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்கத்தினர் கடந்த 7 ஆம் திகதி தொடக்கம் நடத்திய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் நேற்று மாலையுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

img_2563img_2571

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கைக்கு அமைய வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் வட பிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்க ஊழியர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்தே பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் முதற்கட்டமாக 90 தொழிலாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More