குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
அமெரிக்காவின் முதல் பெண்மணி மிச்சல் ஒபாமாவை தூற்றிய தன்னார்வ தொண்டுப் பணியாளர் ஒருவர் பதவியை இழந்துள்ளார். இனவாத அடிப்படையில் முகநூலில் கருத்து வெளியிட்ட பணியாளரே இவ்வாறு பதவியை இழந்துள்ளார். அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியா மாநிலத்தின் க்ளே நகரில் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றில் கடமையாற்றி வரும் பெண் பணியாளரான Pamela Ramsey Taylor என்ற பெண் மிச்சல் ஒபாமாவை தூற்றி முகநூலில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த கருத்தை க்ளே நகர மேயர் Beverly Whaling வரவேற்கும் வகையில் கருத்து ஒன்றை முகநூலில் பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. மேயர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர் ஆகியோரை பணி நீக்குமாறு கோரி 85000 பேரிடம் கையெழுத்துக்கள் திரட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.