202
யாழில் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் ஒருவரை பொலிசார் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிசைக்காக அனுமதித்து உள்ளனர்.யாழ்.கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்று புதன் கிழமை இரவு 7 மணியளவில் வாள் வெட்டுக்கு இலக்காகிய நிலையில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் வீதியில் கிடந்துள்ளர்.
அதனை அவதானித்த வீதியால் சென்றவர்கள் மானிப்பாய் பொலிசாருக்கு அறிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் படுகாயமடைந்த நிலையில் இருந்தவரை மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிக்கிச்சைக்காக அனுமதித்தனர்.குறித்த வாள் வெட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love