Home பிரதான செய்திகள்அவுஸ்திரேலிய அணியின் தேர்வாளராக ஹொன்ஸ் தெரிவு

அவுஸ்திரேலிய அணியின் தேர்வாளராக ஹொன்ஸ் தெரிவு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் தேர்வுக்குழு தலைவராக ட்ரவர் ஹொன்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேர்வுக்குழுத் தலைவராக கடமையாற்றி வந்த ரொட் மார்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவுஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக அடைந்து வரும் தோல்விகளைத் தொடர்ந்து ரொட் மார்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தேர்வுக்குழுவில் கிரேக் சப்பலும் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஹொன்ஸ் மற்றும் சப்பல் ஆகியோர் இடைக்கால அடிப்படையில் அவுஸ்திரேலிய அணியின் தேர்வுக்குழுவில் பணியாற்ற உள்ளனர். ஹொன்ஸ் இதற்கு முன்னரும் தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவராக பத்து ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More