150
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.2 ஆக பதிவாகியுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
ஹரியானாவில் உள்ள பவல் நகரின் தென்கிழக்கே 13 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறி்த்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
Spread the love