Home உலகம்தோல்வியை ஏற்றுக்கொள்வது எளிதானதாக தெரியவில்லை – ஹிலாரி கிளின்ரன்

தோல்வியை ஏற்றுக்கொள்வது எளிதானதாக தெரியவில்லை – ஹிலாரி கிளின்ரன்

by admin

நடைபெற்று முடிவடைந்த  அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர்; கலந்து கொண்ட முதலாவது   நிகழ்ச்சி ஒன்றில் ஹிலாரி கிளின்ரன் தனது தோல்வியினால் ஏற்பட்ட ஏமாற்றத்தை வெளிப்பிடையாக ஒப்புக் கொண்டுள்ளார்.

வெளிநிகழ்ச்சிகளில் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்த ஹிலாரி நேற்றைய தினம் வோஷிங்டன் குழந்தைகள் பாதுகாப்பு இல்ல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வேளையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த விழாவுக்கு வருவது தனக்கு எளிதாக அமையவில்லை  பெரும் கஷ்டங்களுக்கு மத்தியில் தான் இந்த விழாவில் கலந்து கொள்வதாகவும் தெரிவித்த அவர்  இந்தத் தோல்வியால் தான் மிகவும் துவண்டுவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

தோல்வியை ஏற்றுக்கொள்வது எளிதானதாக தெரியவில்லை எனவும்  தான் இந்த  தேர்தல் மூலம் அமெரிக்க மக்களின்  உணர்வை புரிந்து கொண்டுள்ளதாகவும் இந்தத் தோல்வியானது  தனக்கு ஒரு பாடத்தை கற்றுத் தந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More