150
சென்னை பாரிமுனையில் உள்ள தாஸ் இந்தியா அலுவலக கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டடத்தின் 3வது தளத்தில் தீ பற்றி எரிவதால் கரும்புகை சூழ்ந்துள்ளதாக இந்திய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பணபரிமாற்றக் கட்டடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தனியார் வங்கிகள் அருகில் இருப்பதால் தீயை அணைக்கும் பணியில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டடத்தில் இருந்து ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சேதமதிப்பு பற்றி இதுவரை வெளியாகவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
Spread the love