அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கென 457 விசா என்ற 4 ஆண்டு கால விசா திட்டம் நடைமுறையில் உள்ளது. குறித்த விசாவின்படி, அங்கு தொழில் புரியும் வெளிநாட்டு தொழிலாளர்கள் முதல் ஒப்பந்தம் முடிவடைந்து இன்னொரு வேலையை தேடுவதற்காக 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு வந்தது.
தற்பொழுது இது காலஅவகாசம் 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு குடியேற்றத்துறை அமைச்சர் பீற்றர் ரட்டன் அறிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் 19ம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரும் என அவர் அறிவித்துள்ளார்.
இது வேலைக்காக காத்திருக்கின்ற அவுஸ்ரேலியர்களுக்கு கூடுதலாக சந்தர்ப்பத்தை வழங்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியர் ஒருவர் ஒரு வேலைக்கு தயாராக இருக்கிறபோது அவருக்கு முன்னுரிமை அளிப்பது என்ற அரசின் கொள்கையை முன்னுரிமைப்படுத்தும் நோக்குடன் இது மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.