குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியல் சாசனம் மதச் சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டுமெனவும் புதிய அரசியல் சாசனத்தினை அமுல்படுத்துவதன் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த இடமளிக்கப்பட முடியாது எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு, பொருளாதாரம், அரசியல் மற்றும் சுற்றாடல் போன்ற துறைகளுக்கு சவால் விடுக்கும் வகையிலான விடயங்கள் புதிய அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்படக் கூடாது என குறிப்பிட்டுள்ள அவர் புதிய அரசியல் சாசன உருவாக்கம் தொடர்பில் ஆறு செயற்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இந்தக்குழுக்களின் பரிந்துரைகளை கருத்திற் கொண்டு பாராளுமன்றமே இறுதித் தீர்மானம் எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய அரசியல் சாசனம் நாட்டின் ஜனநாயகத்தை மேலும் மேம்படுத்தக் கூடிய வகையில் அமையப்பெற வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.