167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணம் மணியம்தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா செடி வளர்த்த நபர் ஒருவரை நேற்றைய தினம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து குறித்த வீட்டினை சோதனையிட்ட காவல்துறையினர் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ததுடன் கஞ்சாச் செடியினையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 2ஆம் குறுக்குத்தெரு மணியம்தோட்டம் யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள 32 வயதான மாயகிருஷ்ணன் ராஜேந்திரன் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love