குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குற்றவியல் சட்டத்தின் புதிய சரத்துக்கள் மீளவும் திருத்தி அமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தேக நபர் ஒருவரை கைது செய்ததன் பின்னர் சட்ட உதவி பெற்றுக்கொள்வது தொடர்பில் அண்மையில் குற்றவியல் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தம் மீளவும் திருத்தி அமைக்கப்பட வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சரத்தினை மாற்றியமைக்குமாறு யோசனை முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது. சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டால் மட்டுமே அவர் சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்ள முடியும் என அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருந்த சட்டத் திருத்தத்திற்கு சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோரிடமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சரத்தினை திருத்தி அமைப்பதற்கு யோசனைகளை முன்வைக்குமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தம்மிடம் கோரியதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜிப்ரி அழகரட்னம் தெரிவித்துள்ளார்.