186
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடந்த வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதன் மூலம் அரசியலமைப்புச் சட்டம் மீறப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள 6 முறைப்பாட்டு மனுக்களை விசாரிக்கும் திகதியை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர உட்பட சிலரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்களை எதிர்வரும் மார்ச் 28ம் திகதி விசாரணை செய்யவுள்ளதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Spread the love