குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இராணுவ சதிப் புரட்சிக்கு இடமளிக்கப்பட மாட்டாது என பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். நாட்டில் இராணுவ சதிப் புரட்சி முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஜனநாயக அடிப்படையில் மட்டுமே ஆட்சி நடத்தப்பட முடியும் என குறிப்பிட்டுள்ள அவர் கிளர்ச்சிகள் சதிப் புரட்சிகளுக்கு எவ்வித சந்தர்ப்பமும் அளிக்கப்படாது எனவும்தெரிவித்துள்ளார். நாட்டில் எந்தக் கட்சி ஆட்சி செய்கின்றது என்பது முக்கியமானதல்ல எனவும் ஜே.வி.பி., ஐ.தே.க மற்றும் சுதந்திரக் கட்சி எந்த கட்சி ஆட்சி செய்தாலும் ஜனநாயகம் நாட்டில் நிலைநாட்டப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.