குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச பதினைந்து கோடி ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. காலி மற்றும் வத்தளை பிரதேசங்களில் நீதிக் கட்டடத் தொகுதிகளை அமைப்பதற்காக அரச பொறியியிலாளர் கூட்டுத்தாபனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விமல் வீரவன்ச மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ பாராளுமன்றில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் விமல் வீரவன்ச இவ்வாறு பணத்தை கொள்ளையிட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2015ம் அண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, பிரச்சார நடவடிக்கைகளுக்காக இந்தப் பணத்தை விமல் வீரவன்ச பயன்படுத்தியிருந்தார் என குறிப்பிட்டுள்ள விஜயதாச ராஜபக்ஸ இது தொடர்பிலான ஆதாரங்கள் சாட்சியங்கள் தம்மிடம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.