குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹாவா குழுவின் பின்னணியில் அரசியல் சக்திகள் இருப்பதாக தென்படவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஹாவா குழுவினை கட்டுப்படுத்த இராணுவத்தை ஈடுபடுத்தப் போவதில்லை எனவும் ஹாவா குழு ஒர் பயங்கரவாத குழுவல்ல எனவும் இதனால் இராணுவத்தினரை பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஹாவா குழுவினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் போது காவல்துறையினர் உதவிகளை கோரினால் அதற்கான உதவிகளை வழங்க படையினரை ஈடுபடுத்த முடியும் என குறிப்பிட்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் சில தரப்பினர் பிரச்சாரம் செய்து வருவதனைப் போன்று ஹாவா குழுவினர் பாரதூரமான ஓர் குழு அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.