குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய வேண்டுமாயின் அதற்கு அரசியல் சானத்தை மாற்றியமைக்க வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சாசனத் திருத்தங்களின் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார். எனவே அரசியல் சாசனத்தை முழுமையாக மாற்றியமைப்பது அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ நாளை சீனா விஜயம் செய்ய உள்ளார்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாளை சீனாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு சீனாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ம் திகதி வரையில் மஹிந்த ராஜபக்ஸ சீனாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.எல்.பீரிஸ், லொஹான் ரத்வத்தே உள்ளிட்டவர்களும் மஹிந்தவின் சீன விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளனர்.