குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக காணி காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்குவதற்கு புதிய அரசியல் சாசனத்தில் ஏற்பாடுகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் புதிய அரசியல் சாசனத்தின் நிர்வாக விவகாரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட உபகுழுவின் அறிக்கை விரைவில் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பரிந்துரைகளை பாராளுமன்றில் நிறைவேற்றி புதிய அரசியல் சாசனத்தில் உள்ளடக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் புதிய அரசியல் சாசனம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றியதன் பின்னர் 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர் இராணுவ சதிப்புரட்சி என பொய்ப்பிரச்சாரம் செய்து மக்களை பிழையாக வழிநடத்த சிலர் முயற்சிப்பதாகவும்; குற்றம் சுமத்தியுள்ளார்.